ஒரே பாடலில் இத்தனை மருத்துவமா..?? படித்து பயன்பெறுங்கள்..!!

ஒரே பாடலில் இத்தனை மருத்துவம் உள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா..? படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!

நம் முன்னோர்கள் இந்த இந்த நோய்களுக்கு இதை இதை செய்தால் சரியாகும் என்று அப்போதே சொல்லி இருக்கிறார்கள் சிலர் எழுதியும் வைத்துக் கொண்டு போயிருக்கிறார்கள். அதாவது எடுத்துக்காட்டாக கல்லீரல் சம்பந்தமான எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதற்கு கரிசாலை பயன்படுத்துங்கள் என்றும். முடி வளர்வதற்கு நீலி நெல்லில் மூளைக்கு வல்லாரை போன்ற பல பயனுள்ள தகவல்களை சொல்லி இருக்கிறார்கள். அனைத்து வகையான மருத்துவ குணங்களும் ஒரே பாடலில் உள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆமாம் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இந்த மருத்துவ பயன்கள் உள்ளது தற்போது அதைப் பற்றி பார்க்கலாம். இந்தப் பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது.

மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே
தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!!

என்ற பாடலில் அவ்வளவு மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளது. இதை அனைவரும் கட்டாயம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

Read Previous

நீண்ட நாள் வாழ ஆசைப்படுபவர்கள்.. இந்த பதிவை கட்டாயமாக படிக்கவும்..!!

Read Next

சளி, இருமலை ஓட ஓட விரட்ட இந்த கசாயம் குடிங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular