ஓட்ஸை வைத்து உப்புமா செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா..!! அசத்தலான செய்முறை இதோ..!!

நம்மில் பல பேர் உடலின் ஆரோக்கியத்திற்காக ஓட்ஸ் சாப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. அதை எப்போதும் ஒரே மாதிரி சாப்பிடாமல் உப்புமாவாக எப்படி செய்து சாப்பிடுவது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – ஒரு கப்,
வெங்காயம் – ஒன்று,
பச்சை மிளகாய் – 4,
கேரட் – ஒன்று,
பீன்ஸ் – 6,
பச்சை பட்டாணி – சிறிதளவு,
துருவிய தேங்காய் – சிறிதளவு,
கடலைப்பருப்பு – இரண்டு ஸ்பூன்,
கடுகு – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு,
கறிவேப்பில்லை, கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை:

பாத்திரத்தை எடுத்து ஒரு கப் அளவு ஓட்ஸ் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். வருத்ததை தனியாக எடுத்து ஆறவிடவும். ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு கடுகு கடலைப்பருப்பு கறிவேப்பிலை பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.

கேரட் பீன்ஸ் பச்சை பட்டாணி ஆகியவற்றை அதில் சேர்த்து நன்றாக வதக்கி துருவிய தேங்காயை சேர்த்து வதக்கவும். அதில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். ஒரு கப் ஓட்ஸ்க்கு இரண்டு கப் தண்ணீர் தேவை. தண்ணீர் கொதித்து வந்த பிறகு அதில் ஓட்ஸை போடவும்.

அது நன்றாக வெந்தவுடன் இறக்குகின்ற பொழுது கொத்தமல்லியை சிறிதாக வெட்டி தூவிக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான ஓட்ஸ் உப்புமா தயார்.

Read Previous

உடல் கொழுப்பை கரைக்க இந்த கீரையை சாப்பிடுங்கள் போதும்..!! அசத்தலான செய்முறை இதோ..!!

Read Next

105 காலிப்பணியிடங்களுடன் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு..!! ரூ.42,000/- வரை மாத ஊதியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular