
உங்கள் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு வருகிறீர்களா இனி கவலை வேண்டாம் உங்கள் உடல் எடை சீக்கிரத்தில் குறைய வேண்டுமென்றால் இதை மட்டும் சரியான முறையில் கையாளுங்கள்…
சோம்பை நாம் அதிக சுவையூட்டியாகவே பார்த்திருக்கிறோம் சோம்பை வாசனை திரவியமாக பிரியாணி மற்றும் அசைவ குழம்புகளில் பயன்படுத்தி வருகிறோம், ஆனால் சோம்பு ஏராளமான மருத்துவ பலன்களை கொண்டது, பெரும் வயிற்றில் சோம்பு தண்ணீர் குடித்தால் ரத்தம் சுத்தமாகும் மேலும் வாய்வு தொல்லைகள் நீங்கும், வயிறு மந்தமாக உள்ளவர்கள் சோம்பை சாப்பிட்டால் வயிறு லேசாகும் வயிறு உப்பிசம் போன்ற பிரச்சனைகள் தீரும், கடினமான உணவுகளை செரிக்க வைக்க வேண்டும் என்ற பட்சத்தில் சோம்புவே உடலுக்கு தேவையான மருந்தாக பயன்படுகிறது, அடிக்கடி உங்கள் வாய் துர்நாற்றம் அடிக்கிறதா கவலை வேண்டாம் சிறிது சோம்பை எடுத்து வாயில் போட்டு மென்று பாருங்கள் துர்நாற்றம் நீங்கி வாயில் கமகமவென வாசம் வீசும் சோம்பு தண்ணீர் நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும் இரவு நேரத்தில் சோம்பு தண்ணீர் குடித்து தூங்குவதனால் இரவு நேரம் ஆழ்ந்த உறக்கம் மற்றும் நிம்மதியான உறக்கத்தை தூண்டும், மாதவிடாய் கால வயிற்று வலியை போக்கும் தன்மை சோம்புவிற்கு உண்டு முக்கியமாக சோம்பு உடல் பருமனை குறைக்கிறது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கக் கூடியது சோம்பு..!!