கடன் ஆப்புகள் மூலம் உங்கள் உயிருக்கு ஆபத்து வரலாம்..!!

தற்சமயம் உலகம் முழுவதும் கடன்களை இருந்த இடத்திலிருந்து பெறுவதற்கு பல செயலிகள் மற்றும் புதுப்புது யுத்திகளை பலரும் கையாண்டு வருகின்றனர் அப்படி இருக்கும் பட்சத்தில் கடன் வழங்கும் செயலியே உங்களுக்கு எமனாக மாறும்…

கடன் செயலியில் பதிவு செய்ய தொடங்கியவுடன் கேமரா போன்ற சில அனுமதி கேட்கும் நாமும் அதற்கு அனைத்திற்கான அனுமதிகளையும் தருவோம், இதன் மூலம் நமது தொலைபேசியில் உள்ள அழைப்பு எண்கள் மற்றும் புகைப்படங்கள் தகவல்கள் என பலவும் திருடப்படும், மேலும் கடன் தருவதாக சொல்லி நமது புகைப்படத்தினை பெற்றுக்கொண்டு நமது புகைப்படத்தினை தவறுதலாக பயன்படுத்தி புகைப்படமாகவோ அல்லது வீடியோவாக உறவினர்களுக்கு அனுப்புவதாக சொல்லி பயமுறுத்தி தங்களிடம் பணம் பறிக்க முயலுகின்றனர், அடுத்த கட்டமாக தவறுதலாக வீடியோக்களை உருவாக்கி அதனை நமது அலைபேசி மூலம் whatsapp-யில் அனுப்பி நாம் பார்த்த பின்பு நம் மன உளைச்சலுக்கு ஆளாகி என்ன செய்வது என்று அறியாமல் இதற்கான சிறந்த தீர்வு மரணம் என்று நினைத்து தற்கொலை செய்து கொள்வது இன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது, மேலும் கடன் செயலிகளை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் எவரேனும் உங்களிடம் தவறுதலாக பணம் தருவதாக தகவல் தருகிறார்கள் என்றால் உடனே அந்த அலைபேசி எண்ணை துண்டிக்க வேண்டும் இல்லை என்றால் அருகில் உள்ள காவல்துறைக்கு சென்று புகார் அளிக்க வேண்டும் இதன் மூலம் நமது உயிரை நம்மால் பாதுகாக்க முடியும்..

Read Previous

சிறுமியின் உயிருக்கு எமனாக மாறிய நூடுல்ஸ்..!!

Read Next

பழமொழி பழையது ஆனால் அதனின் மகத்துவம் சிறந்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular