கடன் பிரச்சனை கழுத்தை நெருக்குகிறதா?.. கவலை வேண்டாம்.. இதோ பரிகாரங்கள்..!!

ஒரு மனிதர் வாழ்க்கையில் கடன் பிரச்சினை வந்துவிட்டால் அவரது நிம்மதி தொலைந்து விடும்.

சரியாக தூங்க முடியாது. சாப்பிட முடியாது. கடன்காரர்கள் வீட்டு வாசலில் வந்து விடுவார்களோ என்று பயந்துக் கொண்டே இருப்பார்கள்.

சில பேர் மனநிம்மதி தொலைந்து தற்கொலை கூட செய்து கொள்ளும் அளவிற்கு இந்த கடன் பிரச்சினை மனஅழுத்தத்தை கொடுத்து விடும்.

முடிந்த அளவு தேவைக்கு மட்டும் போதுமான அளவு கடன்களை வாங்கி நிம்மதியோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும். கடன் பிரச்சினைகளிலிருந்து விடுபட பரிகாரங்கள் சரி கைநீட்டி கடன் வாங்கிவிட்டோம்.

வட்டி மட்டுமே கட்டிக்கொண்டு வருகிறோம். அசலை திருப்பித் தர முடியவில்லை. கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனையிலிருந்து வெளியே வர சில பரிகாரங்களை பார்ப்போம் –

கடன் பிரச்சினையால் தவித்துக் கொண்டிருப்பவர்கள் ஸ்ரீ யோக நரசிம்மரையும், ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபட்டு வாருங்கள். நிச்சயம் நீங்கள் கடன் பிரச்சினைகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுவீர்கள்.

ஸ்ரீ நரசிம்மரை வணங்கி வந்தால், பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி, திருமண தடை அனைத்தும் விலகி நிம்மதி பெறுவீர்கள்.

கொடுத்த கடன் திரும்ப கிடைக்க, 8 செவ்வாய் கிழமைதோறும் பைரவர் சந்நிதிக்கு சென்று நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வாருங்கள்.

நிச்சயம் கொடுத்த கடன்கள் அனைத்தும் கிடைக்கும். கடன் பிரச்சினையிலிருந்து நிம்மதி பெற, சிவன் கோவிலுக்குச் சென்று வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை சுற்றி வாருங்கள். உங்கள் குறைகள் தீர்ந்து விடும்.

Read Previous

ஜிம்மில் வெறித்தனமா Workout செய்யும் ரம்யா பாண்டியன் – வீடியோ..!!

Read Next

வீட்டுல கறிவேப்பிலை அதிகமா இருக்கா?.. அப்ப ஒருமுறை இந்த மாதிரி சட்னி செய்யுங்க..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular