
கர்நாடக மாநிலத்தில் மனைவியை சந்தேகப்பட்டு கணவனே சுட்டுக் கொன்று கொலை செய்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபண்ணா என்பவர் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் விராட் பேட்டை பெடோலி கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு திருமணமான நிலையில் ஷில்பா என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.
இந்நிலையில், இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் இருவரும் விவாகரத்து செய்ய விரும்பினர். இந்நிலையில், தன்னுடைய மனைவி தன் கண் முன்னே செல்போனில் மற்றவர்களிடம் பேசுவதை கணவர் போபண்ணாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் மனைவியை நேற்று சுட்டுக்கொன்று விட்டு பின்னர் போலீசில் சென்று சரணடைந்தார். கணவனே மனைவியை சுட்டு கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.