நாம் தூங்கும் போது கனவு காண்பது இயல்பு அப்படி இருக்கும் பட்சத்தில் இறந்தவர்கள் கனவில் வருவது நம்மை எச்சரிப்பதாக ஐதீகம் மற்றும் நிபுணர்கள் பலர் கூறுகின்றனர்…
இறந்து போன தாய் தந்தை நமது கனவில் வந்தால் நம்மை எச்சரிப்பதற்காகவும் நமக்கான சூழல்களை எடுத்துரைப்பதற்காகவும் வருகிறார்கள் என்று ஐதீகம் மற்றும் ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர், இறந்து போன தாய் தந்தை தனது மகன் அல்லது மகள் கனவில் வந்தால் அவர்களுக்கு வரும் ஆபத்தை எச்சரிப்பதற்காகவே வருகிறார்கள் என்று கூறுகின்றனர், இறந்தவர்கள் கனவில் தோன்றி ஏதாவது உங்களிடம் பேசினால் அல்லது பேச வர வார்த்தைகள் உங்களுக்கு புரியவில்லை என்றால் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நெருக்கடி ஏற்பட போகிறது என்று அர்த்தம், அதேபோல் இறந்த தாய் தந்தை உங்களிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால் வருங்காலத்தில் ஏதோ ஒரு சிக்கலில் நீங்கள் மாட்டிக் கொள்ளப் போகிறீர்கள் என்று அர்த்தம் அதனை தெளிவுபடுத்தவே உங்களிடம் உங்கள் தாய் தந்தை கனவில் வந்து பேசுவதாக அல்லது அமைதியாக இருப்பதை காண முடியும்…!!




