
நாட்டில் உள்ள பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நலத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று, “பிரதான் மந்திரி மாத்ரு யோஜனா” என்ற திட்டமாகும். இந்த திட்டம் ஏழை எளிய கர்ப்பிணி பெண்களுக்கு 3 தவணைகளாக நிதி உதவி வழங்குகிறது. அதாவது, முதல் முறையாக கருவுற்று குழந்தை பெற்றெடுக்கும் தாய்மார்கள் கர்ப்ப காலத்திற்கு முன்னும் பின்னும் சீரான முறையில் ஓய்வெடுக்க வேண்டும் என்பதற்காக ஊதிய இழப்பிற்கு ஊக்கத்தொகையாக 2 தவணை ரூ. 5000 வழங்கப்படுகிறது. மேலும், இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தால், 1 தவணையாக ரூ.6000 வழங்கப்படுகிறது. ஆனால், இரண்டாவது முறை குழந்தை பெற்றெடுக்கும் போது இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பினால், கர்ப்ப காலத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகும். மேலும், இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் என்பதை கீழே விரிவாக காண்போம்.
தகுதியுள்ளவர்கள்:
1.மாற்றுத்திறனாளி பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த பெண்கள் இந்த திட்டத்தில் இணையலாம்.
2.வறுமைக் கோட்டிற்கு கீழ் ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண்கள்.
3.100 நாள் வேலை அட்டை வைத்திருக்கும் பெண்கள் .
4. கிசான் சம்மன் கீழ் பயன் பெறும் பெண்கள்.
5.இ-ஷ்ரம் அட்டை வைத்திருக்கும் பெண்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள தகுதிகளை உடைய பெண்கள், அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று AWC திட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும். மேலும், 1-A ஐ படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களான ஆதார் அட்டை, குடும்ப அட்டை, போஸ்ட் ஆபீஸ் அட்டை, வங்கி பாஸ்புக், கணவர் வங்கி பாஸ்புக், மொபைல் நம்பர் ஆகிவற்றை சமர்ப்பிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் 7998799804 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.