ஆண்டலூர் கேட்ட அருகே கல்லூரி மாணவிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கி சிறப்பித்துள்ளார் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அமைந்துள்ள ஆண்டலூர் கேட் திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள ஆதிதிராவிட மாணவியர் விடுதியில் உள்ள 35 மாணவிகளுக்கு முதல் கட்டமாக 35 தையல் இயந்திரங்கள் வழங்கி சிறப்பித்துள்ளனர், மாணவிகளின் முன்னேற்றத்திற்காக தையல் பயிற்சி வழங்கியும் சான்றிதழ் வழங்கியும் அவர்களின் ஊக்கங்களையும் முன்னேற்றத்தையும் சிறப்பிக்கும் வகையில் தையல் இயந்திரங்கள் வழங்கி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா துவங்கி வைத்துள்ளார், மேலும் கல்லூரி தாளாளர் மற்றும் இதர ஆசிரியர்கள் கலந்து கொண்டு அந்நிகழ்வை சிறப்பாகவும் நடத்தினர், இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக 50 தையல் இயந்திரங்கள் வழங்க இருப்பதாகவும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிலையிலும் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு உதவி செய்கிறது என்று தெரியும் வகையிலும் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது, மேலும் பயிற்சி பெற்று தையல் இயந்திரங்களை பெற்றுக் கொண்ட மாணவிகள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அவர்களுக்கு நன்றி செலுத்தினர்..!!