காதலியின் தாயை சரமாரியாக குத்திய காதலன்..!! போலீசார் விசாரணை..!!
திருவள்ளூர் மாவட்டம் கொசவன்பேட்டை பகுதியை சேர்ந்த பிஎஸ்சி 3 ஆம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர் உடன் படிக்கும் அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்த மாணவர் பரத்தை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவியின் வீட்டுக்குச் சென்று பெண் கேட்ட பரத்திடம் அவரது தாயார் சந்திரகுமாரி மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரத்தில் அங்கிருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து அவரது கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.