திருமணம் என்பது சொர்க்கத்தில் முடிவு செய்வது என்பார்கள். அந்த திருமணத்தை இக்கால இளைஞர்கள் விளையாட்டு போக்கில் எடுத்து கொள்கிறார்கள். திருமண உறவு ஒரு அழகிய பந்தம் ஆனால் தற்போது உள்ளவர்கள் வெறும் ஒரு சடங்காகவே பார்க்கிறார்கள். இந்நிலையில் கர்நாடகாவில் திருமணமான மணமக்களுக்கு நடந்த ஒரு சம்பவம் அங்குள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கோலார் பகுதியில் உள்ள நவீன்குமார் என்பவருக்கும் லிகிதா ஸ்ரீ என்பவரும் காதலித்து வந்தார்கள். பின் பெற்றோர் சம்மதத்துடன் நேற்று காலை கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. நேற்று மாலை உறவினர் வீட்டிற்கு தேநீர் அருந்துவதற்காக சென்ற போது, மணமக்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, இருவரும் மாறி மாறி கத்தியால் குத்திக்கொண்டார்கள். இதனை அறிந்த உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். இந்நிலையில் மணமகள் உயிரிழந்த நிலையில் மணமகன் தீவிர சிகிச்சை பெற்று வந்தான், தற்போது அவனும் உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.