
சின்னத்திரையில் டான்சராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் தான் நடிகை சாய் பல்லவி. பிரேமம் படத்தில் ஹீரோயினாக நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என எக்கச்சக்க மொழி திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவர் தனது புதிய விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
அதில், நடன திறமையை வெளிகாட்டும்படியும், கதைக்கு முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தாலும், காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வித்தியாசமான படத்தில் நடிப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். முழுமையான காமெடி கதாபாத்திரம் எந்த மொழியில் கிடைத்தாலும் உடனே சம்மதம் தெரிவித்துவிடுவேன் என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.