
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் திமுக இளைஞர்கள் தங்களது கட்சி கொடியினை காரில் வைத்துக்கொண்டு நடு ரோட்டில் மக்களை அச்சப்படுத்தியும் தொந்தரவு செய்தும் வந்தனர்.
மேலும் ஒருசிலர் காரின் மீது ஏறியும் சாலையில் சென்ற வாகனத்திற்கு வழி விடாமலும் மக்களை அச்சுறுத்தும் வகையில் அவர்கள் செய்யத அட்டகாசங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இந்த வீடியோ இணையத்தில் வெளியானதை கண்ட போலீஸ் அதிகாரிகள் அந்த வண்டியின் எண்ணை வைத்து அந்த இளைஞர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்..!!