தற்பொழுது கொசுக்கள் மூலம் ஜிகா வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வருகின்றது. அதிலும் கர்ப்பிணி பெண்களுக்கு இந்த காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஏடிஎஸ் வகையான கொசுக்கள் மூலம் பரவும் இந்த ஜிகா வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பரவலை கண்டறியப்பட்டதை தொடர்ந்து தேவையான முன்னேற்பாட்டுக்கு நடவடிக்கைகளை மத்திய அரசு மாநில சுகாதார அமைச்சர் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் அதிக அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கர்ப்பிணி பெண்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் இருப்பதை கண்டறியப்பட்டால் கருவின் வளர்ச்சியினை உடனடியாக கண்காணிக்க வேண்டும் என மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டால் கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை குறை பிரசவத்தில் பிறக்க வாய்ப்புள்ளதாகவும். மேலும் குழந்தை குறைபாடுகள் உள்ளதாக பிறப்பதற்கும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தலைவலி, தோல் வெடிப்பு ,மூட்டு வலி ஆகியவை ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பின் அறிகுறியாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் ஜிகா வைரஸ் பாதிப்பு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.