
கிட்னியில் கல் உருவாவது எப்படி..?? கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!
இந்த நவீன காலகட்டத்தில் பெரும்பாலும் சந்திக்கும் ஒரு பிரச்சனை என்னவென்றால் கிட்னியில் கல் இருக்கிறது என்பதுதான். இதனால் ஏற்படும் வலி அதை அனுபவித்த நபர்களுக்கு மட்டுமே தெரியும் எவ்வளவு பெரிய கொடுமையான வலி என்று. இந்நிலையில் கிட்னியில் கல் எப்படி உருவாகிறது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
நாம் சிறுநீர் கழிக்கும் போது சிறுநீரில் உள்ள சில ரசாயனங்கள் வெளியே செல்வதற்கு பதிலாக உடலில் தங்கி அவை படிமங்களாக மாறி பின்னர் அவை தான் கற்களாக மாறுகின்றன. இவை எதனால் உண்டாகிறது என்றால் அசைவம் அதிகமாக சாப்பிடும் பொழுது ஒரு சிலர் தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள். அதுமட்டுமின்றி சாதாரணமாகவே ஒரு சிலர் தண்ணீர் அதிகமாக குடிக்க மாட்டார்கள் இதுபோன்ற காரணத்தினாலும் கல் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம். உடல் பருமனாக இருப்பவர்களுக்கும் நீண்ட நேரம் தூங்காமல் இருப்பவர்களுக்கும் வைட்டமின் b6 மற்றும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி போன்ற குறைபாடுகள் இருப்பவர்களுக்கும் கிட்னியில் கல் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஆரோக்கியமாக வாழ்வதற்கு முதலில் ஆரோக்கியமான பழக்கங்களை உங்களின் வாழ்வில் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக தண்ணீர் அருந்துவது நேரத்திற்கு கரெக்டாக சாப்பிடுவது ஆரோக்கியமான பழங்களை உண்ணுவது இரவில் நீண்ட நேரம் கண் முழித்திருக்காமல் தூங்குவது போன்ற பொதுவான பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் பல நோய்களிலிருந்து நாம் தப்பிக்கலாம்.