மது அருந்தும் பழக்கம் இருக்கும் ஒரு நபர் தினமும் குடிப்பதன் மூலம் ஒரு ஆண்டுக்கு 9.5 லிட்டர் மது அருந்துகிறார்கள் என்று புள்ளி விவரங்கள் கூறுகிறது அதேபோல் தொடர்ந்து குடிக்கும் நபர் திடீரென ஒரு 28 நாட்கள் நிறுத்தினால் அவரது உடல் நிலையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த துவங்கும் என்றும் கூறுகின்றார்கள்…
அப்படி ஒருவர் குடிப்பதை திடீரென நிறுத்திவிட்டால் அவருக்கு வாந்தி குமட்டல் பதற்றம் தூக்கமின்மை நடுக்கம் வியர்வை ஏற்படுதல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் மேலும் சில அறிகுறிகளும் பாதிப்புகளும் கூட ஏற்படும் அது குறித்து தெரிந்து கொள்வோம்,மது அருந்துவோர் அந்த பழக்கத்தை திடீரென நிறுத்தும் பட்சத்தில் மிதமான முதல் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் ரத்த அழுத்தம் அதிகரிக்க கூடும் என்றும் இதயத்துடிப்பில் அதிவேக துடிப்பு ஏற்படுவதும் நிகழும்,உடல்நிலை பாதிப்புகள் மட்டுமின்றி மனரீதியாக பாதிப்புகளும் ஏற்படக்கூடும். இல்லாத ஒன்றை இருப்பது போல் உணரும் மாய எண்ணங்கள் டெலீரியம் என்று குறிப்பிடும் அதிகளவு குழப்பம் வலிப்பு தாக்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்,ஒவ்வொருவரும் ஒவ்வொரு அளவில் மதுபானங்களை குடிப்பார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் மது அருந்துவதை நிறுத்தும் பொழுது ஏற்படும் பக்க விளைவுகளும் அதன் தாக்கத்தின் கால அளவுகளும் மாறுபடும் என்று கூறப்படுகிறது,அதன்படி இந்த அறிகுறிகள் ஆனது சில வாரங்கள் முதல் மாதங்கள் வரையில் இருக்கலாம் அதே போல் மன குழப்பங்கள் உங்களுக்கு அதிகரிக்கும் பட்சத்தில் உடனடியாக ஒரு மனநல ஆலோசகரை சந்தித்து உரிய ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது, மேலும் அதிக அளவு குடிப்போருக்கு வயிறு மற்றும் செரிமான கோளாறுகள் அதிகம் இருக்கும் இதனை நாம் நிறுத்திக் கொள்ளும் பட்சத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நமது செரிமானம் மேம்படுவதோடு ஒட்டுமொத்த செரிமான மண்டலமும் வலுபெறும்,அதிகளவு குடிக்கும் பழக்கம் இருப்பவருக்கு உடலில் நீர்ச்சத்து என்பது இருக்காது இதன் காரணமாக தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்படும். அபாயம் அதிகம் அதுவே நாம் மதுப்பழக்கத்தை கைவிட்டு உடலில் நீர்ச்சத்து அதிகரிக்க தேவையான உணவுகளை எடுத்துக் கொண்டால் பாதிப்புகள் குணமாகும்,ஒருவர் திடீரென்று தனது குடிப்பழகத்தை கைவிடும் நிலையில் ஒரு சில பாதிப்புகள் ஏற்பட்டாலும் ஏராளமான நோய்கள் வருவதை நம்மால் தடுக்க முடியும் அதனால் சற்று அந்த பாதிப்புகளை தாங்கி நாம் கடந்து வந்தால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பலாம் என்பதை மனதில் கொள்ளலாம்..!!




