சுங்கவரி குறைக்கப்பட்டதன் காரணமாக தங்கம் விலை எந்தளவுக்கு குறைய தொடங்கியதோ பின்பு அதே அளவிற்கு மீண்டும் உயர தொடங்குகியது. இதனால், நகை விரும்பிகள் நகைக்கடைகளுக்கு செல்வதற்கு தயக்கமுடன் இருக்கிறார்கள். இவ்வாறு, தொடர்ந்து தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, வரும் நாட்களிலும் தொடரும் என்று வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறி இருந்தார்.
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை எதிர்பாராத விதமாக நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது. இதைத் தொடர்ந்ந்து, இன்றும் தங்கம் விலை மிகவும் அதிகரித்திருக்கிறது. 22 கேரட் ஒரு கிராம் தங்கம் 6445 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது இன்று 6470 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 51,560 க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது இன்று 51,760 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.