கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் 100-க்கும் மேற்பட்ட உயிரிழந்த நிலையில் மேலும் மீட்பு பணியில் இன்னும் தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்கள் காப்பாற்றப்பட்டவர்களும் அருகில் உள்ள மசூதிகள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் மேலும் சிலரை மருத்துவமனையில் அனுமதித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சையும் வழங்கி வருகிறது கேரளா அரசு.
மேலும் அவர்களுக்கு உதவி செய்வதற்கு பல பகுதியில் இருந்து நிதி உதவியும் நிவாரண உதவியும் மற்றும் தன்னார்வலர்கள் உதவியும் கேரளாவை நோக்கி வருகிறது, இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 5 கோடி நிதி உதவி வழங்கியுள்ளார் மேலும் காங்கிரஸ் கமிட்டி சார்பாக 1 கோடி வழங்க உள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.