
தற்போது கேரள மாநிலத்தில் வயநாடு பகுதியில் உள்ள நிலச்சரிவு மக்களிடையே பெரும் பாதிப்பு மற்றும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது 180 க்கு மேற்பட்டோர் பலியான எண்ணிக்கையில், மேலும் மீட்பு பணியில் கேரளா அரசு மட்டுமல்லாமல் பல மாவட்டங்களில் இருந்தும் பல மாநிலங்களில் இருந்தும் பேரிடர் மேலாண்மை குழு உதவி புரிந்து வருகிறது, மேலும் இந்த நிலையில் தமிழ் திரையுலக முன்னணி நடிகர் விக்ரம் என பலரும் உதவி வந்த நிலையில் இன்று நடிகர் சூர்யா அவர்களின் குடும்பம் தலா 50 லட்சம் நிதி உதவியை கேரள அரசுக்கு வழங்கியுள்ளது.
மேலும் 150 க்கு மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையிலும் அவர்களுக்கு தேவையான உணவு போன்ற பொருட்களும் தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது, இந்த கோர் விபத்தானது கேரளாவில் பெரும் பகுதியை அளித்து மக்களையும் சூறையாடி உள்ளது.