
தற்சமயம் பெய்து வந்த தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் உள்ள பல அணைகள் நிரம்பியும் பல கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதனால் கேரளா வயநாடு பகுதியில் உள்ள ஒரு எஸ்டேட் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, இந்த நிலச்சரிவில் கிட்டத்தட்ட 190 க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி உள்ளது என்றும் மேலும் இன்னும் சில உயிர்களைத் தேடி வருவதாகவும் கேரள அரசு வெளியிட்டது…
மேலும் இச்சம்பவத்தை கண்டு தமிழ்நாடு முதல்அமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் ஐயா அவர்கள் கேரளாவிற்கு நிதி உதவி வழங்கியுள்ளார், மேலும் இச்சம்பவம் மக்களிடையே பெரும் பாதிப்பையும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இப்படிப்பட்ட கோர தாண்டவ நிலச்சரிவால் இன்னும் எத்தனை உயிர்கள் போக இருக்கிறது என்று கேரளவால் மக்கள் கண்ணீரோடு புலம்புகிறார்கள்.