தேவையான பொருள்: எலுமிச்சை அரைத்துண்டு வெள்ளை சர்க்கரை 10 கிராம் பால் 50 மி.லி செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு எலுமிச்சை பழத்தை பிழிந்து அதன் சாற்றை மற்றும் தனியாக எடுத்துக்கொள்ளவும். மேலும் இந்த எலுமிச்சை சாற்றுடன் 10 கிராம் வெள்ளை சர்க்கரை சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும். இதனை கையில் உள்ள சுருக்கங்கள் மீது தடவ வேண்டும். மேலும் இதனுடன் கையில் பாலை தடவி 15 நிமிடம் உலர வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் கையை கழுவ வேண்டும். இதனை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து 7 நாட்கள் செய்து வந்தால் கையில் ஏற்படும் சுருக்கத்தில் இருந்து முற்றிலுமாக குணமாகலாம்.