கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்து பாருங்கள்..!! அசத்தலான செய்முறை இதோ..!!

கோடை விடுமுறையில் வீட்டிலேயே இருக்கும் குழந்தைகள் ஏதேனும் சாப்பிட கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு இந்த பேபி கார்ன் 65 யை செய்து கொடுத்துப் பாருங்கள். இதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.

தேவையான பொருட்கள்:
பேபி கார்ன் – 12,
மைதா மாவு – 2 மேஜை கரண்டி,
அரிசி மாவு – 3 மேஜை கரண்டி,
சோளமாவு – 1.5 மேஜை கரண்டி,
தயிர் – 5 கரண்டி,
இஞ்சிபூண்டு விழுது – சிறிதளவு,
மிளகாய்தூள் – 1 மேஜை கரண்டி,
கரம் மசாலா – 1 கரண்டி,
எலுமிச்சை சாறு – சிறிதளவு,
கறிவேப்பில்லை – கையளவு,
உப்பு, தண்ணீர், எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: 

முதலில் பேபி கார்னை நீல வாக்கில் வெட்டி எடுத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும். ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் மைதா மாவு அரிசி மாவு சோள மாவு தயிர் இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள் கரம் மசாலா உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி கலக்கவும்.

இதில் பேபி கார்னை போட்டு கலக்கி கொள்ளவும். ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு இந்த கலவையை போட்டு பொறித்து எடுத்தால் சுவையான பேபி கார்ன் 65 தயார்.

Read Previous

முட்டை குழம்பு ஒரு முறை இப்படி வச்சு பாருங்க..!! அம்புட்டு ருசியா இருக்கும்..!!

Read Next

தினமும் இரண்டு முட்டை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular