கோபுர கலசத்தில் தானியம் நிரப்புவது ஏன் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
கோபுர கலசத்தில் தானியம் நிரப்புவது ஏன் என்று நம்மில் பலருக்கும் தெரியாது. அதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம். நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காச்சோளம், சாமைஆகியவை கோபுர கலசத்தில் இருக்கும். குறிப்பாக தானியம் அதிகமாக இருக்கும் காரணம் என்னவென்றால் வரகு மின்னலை தாங்கும் அதிக ஆற்றலை பெற்றது. என அந்த காலத்திலேயே நமது முன்னோர்கள் அறிந்து வைத்துள்ளார்கள். நமது முன்னோர்கள் கூறிய அறிவியல் இதுதான். இது உண்மையும் கூட. இயற்கையின் சீற்றத்தினால் விவசாயங்கள் அழிந்து போனாலும் மீண்டும் விவசாயம் செய்ய தானியங்களை கோபுர கலசத்திலிருந்து எடுத்து பயன்படுத்தலாம் இந்த தானியங்களின் திறன் 12 வருடங்கள் வரை தாக்குப் பிடிக்கக் கூடியது அதற்கு பிறகு தானியங்கள் தன் சக்தியை இழந்து விடும் என்பதால் 12 வருடங்களுக்கு ஒரு முறை குடமுழக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.




