
சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு ஆதார் கட்டாயம்..!! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல கால மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 16ம் தேதி மாலை முதல் நடை திறக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் நலன் கருதி பல்வேறு முன்னேற்பாடுகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் நடப்பு மகர விளக்கு, மண்டல சீசனில் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினமும் 70,000 பக்தர்கள் மட்டுமே சபரிமலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மேலும் உடனடி தரிசன அடிப்படையில் 10,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.