புகைப்பிடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நாம் பலரும் அறிந்துள்ளோம், இந்த நிலையில் பலரும் சிகரெட் பிடிப்பது மற்றும் புகையிலை பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் இன்றும்.
மேலும் சிகரெட் பிடிப்பதனால் ஏற்படும் தீமைகள் இன்று சாதாரண சிகரெட்டில் இருந்து இ-சிகரெட் நிக்கோடின், சுவைகள், புரோப்லீன் கிளைக்கால், காய்கறி கிளிசரின்,என்று பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது,இவை நுரையீரலை சேதப்படுத்துவது மட்டுமின்றி ஃப்ரீ ரேடிக்கல் என்ற நச்சு தன்மையை வெளியேற்றி புற்றுநோய் உண்டு பண்ணுகிறது, இதை பயன்படுத்துவதனால் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மூளை வளர்ச்சியை சிதைத்து விடுகிறது, மேலும் கர்ப்பம் தரித்த பெண்கள் இ-சிகரெட்டை பயன்படுத்துவதனால் கரு கலைதல் மற்றும் அதிக ரத்தப்போக்கு இவற்றை உண்டு பண்ணும் என்றும் முடிந்தவரை சிகரெட் பழக்கத்திலிருந்து வெளிவர வேண்டும் என்றும் மருத்துவ குழு தகவலை வெளியிட்டுள்ளது..!!