நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் மற்றும் சாட்டை துறைமுருகன் இருவரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது முன்னாள் முதல்வர் திமுகவின் தலைவருமான கருணாநிதி குறித்து சர்ச்சுக்குரிய வகையில் பேசி இருந்தனர்.
இந்நிலையில் கலைஞருக்கு எதிராக சீமான் வாய்க்கொழுடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அமைச்சர் சேகர்பாபு கூறியிருக்கிறார். மேலும் சீமானுடைய இந்த சர்ச்சை பேச்சு தொடரும் ஆனால் அவரின் வாய்க்கொழுப்பு அடக்கப்படும் என்றும் சீமான் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.