
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் அனைத்து பள்ளிகளிலும் சிறப்பான முறையில் நடைபெறும். அந்த வகையில், நாளை 78 – வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு அனைத்து பள்ளிகளும் தயாராக உள்ளது. தற்போது பள்ளிக்கல்வித்துறை விடுத்த அறிக்கையில், அணைத்து பள்ளிகளிலும் எழுச்சியுடன் சுதந்திர தினத்தை கொண்டாடுங்கள். மலர்களையும், வண்ணக் காகிதங்களையும் பள்ளி வளாகம் முழுவதும் ஒட்டி கொண்டாடலாம் என்று தெரிவித்திருக்கிறது.
கொடியேற்றம் செய்யும் போது அதை தவறுதலாகவோ, தலைகீழாகவோ ஏற்றாமல் சரியான முறையில் ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது. மேலும், பிளாஸ்டிக் மற்றும் கிழிந்த தேசிய கொடிகளை ஏற்ற கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிக்கையில் கூறி இருக்கிறது.