
கிராம சபை கூட்டம் ஆகஸ்ட் 15 இன்று சுதந்திர தின நாளில் கிராமம் தோறும் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் பொன்னங்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சுதந்திர தின நாள் இன்று தேசியக்கொடி இயற்றிய பின் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது, பிறகு ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் நாமக்கல் மாவட்ட அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் என பலரும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர், மேலும் மக்கள் தங்களின் கோரிக்கைகளையும் முன்வைத்தனர் அதுமட்டுமின்றி பொன்னங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் ஆண்டு கணக்கு வழக்கு பற்றி மக்களிடம் கூறினார்..!!