காய்கறி வகைகளில் ஒன்றான இந்த பீன்ஸில் கலோரிகள், கொழுப்பு சத்து, நார்சத்து, விட்டமின் கே, சி பி, இரும்பு சத்து, பொட்டாசியம் ஆகிய பல்வேறு சத்துக்களை தன்னகத்தை கொண்டுள்ளது.
இந்த பீன்ஸை வைத்து பொரியல் செய்வது எவ்வாறு, அதை சுவைமிக்கதாய் செய்வது எவ்வாறு என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய்
- கடுகு
- சீரகம்,
- உளுந்து
- கடலைப்பருப்பு
- கருவேப்பிலை
- பெரிய வெங்காயம்
- பீன்ஸ்
- மஞ்சள் தூள்
- உப்பு
- வரமிளகாய்
- வறுத்த வேர்க்கடலை
- தேங்காய் துருவல்
செய்முறை
ஒரு கடாயில் வரமிளகாய், வேர்க்கடலை மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றை வறுத்து அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பான பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதனை தொடர்ந்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி கடுகி, உளுந்து, சீரகம், மற்றும் கடலை பருப்பு சேர்த்து நன்றாக பொரிய விட்டு கருவேப்பிலை சேர்த்து நன்றாக தாளிக்க வேண்டும்.
பின்னர் பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி அதன் பின் மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை லேசாக தண்ணீர் தெளித்து வதக்கவும் இறுதியாக அரைத்து வைத்துள்ள கடலை பொடியை சேர்த்து நன்றாக கிளரிவிட்டு இறங்கினால் சுவையான மணமணக்கும் பீன்ஸ் பொரியல் ரெடி.