பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது நாளுக்கு நாள் அப்படி இருக்கும் பட்சத்தில் சென்னையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்த 17 வயது கொண்ட வட மாநிலச் சிறுவன்..
சென்னை திருவான்மையூரை சேர்ந்த 13 வயது சிறுமியை விடுதிக்கு அழைத்து வந்து 17 வயது வடமாநிலச் சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, 13 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் தகாத ஆசை வார்த்தைகளை கூறி அந்த சிறுமியிடம் பாலியல் தொல்லை தந்துள்ளார், மேலும் அடிக்கடி அந்தச் சிறுமியிடம் பாலியல் தொல்லை தந்து வந்த வடமாநிலச்சிறுவன் தனது ஆசை வார்த்தைகள் மூலம் பயன்படுத்திக் கொண்டான் மேலும் அந்த சிறுமியின் உடல் பரிசோதனையின் போது சிறுமி அடிக்கடி பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார் என்று தெரியவந்துள்ளது, வட மாநில சிறுவனை சென்னை திருவான்மையூர் காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி அந்தச் சிறுவனை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தது இச்சம்பவம் திருவான்மியூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!!!