சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திருநங்கைகள்..!!

காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திருநங்கைகளால் அப்பகுதியில் இன்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது, சென்னை பரங்கிமலை பகுதியை சேர்ந்தவர் மந்த்ரா…

திருநங்கையான இவர் சமூக ஊடகங்களில் திருநங்கை தலைவிகளின் செயல்பாடுகளை விமர்சனம் செய்து வருகிறார், இந்நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை நேற்று இருவருக்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஒரே நேரத்தில் திரண்டு முற்றுகையிட்டனர், தகவல் அறிந்த வேப்பேரி காவல் நிலையம் போலீசார் சம்பவ இடம் வந்தனர், மேலும் கூடுதல் போலீசாரும் வரவழைக்கப்பட்டனர், காவல் ஆணையர் அலுவலக மூணாவது நுழைவு வாயில் மூடப்பட்டது பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார், புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர், அந்த புகார் மனுவில் திருநங்கை மந்த்ரா சமூக ஊடகங்களில் எங்களது சமூக மக்களை பற்றி அவதூறான செய்திகளை பரப்பி இழிவுபடுத்தும் செயல்களைத் தொடர்ந்து செய்து வருகிறார், இதன் மூலம் சமூகத்தில் எங்கள் மீதான கண்ணோட்டம் தவறாக பதிவாகிறது இதனால் மூத்த திருநங்கைகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர் எனவே சம்பந்தப்பட்ட திருநங்கை மந்த்ராவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் உறுதி அளித்த பின்னர் திருநங்கைகள் கலைந்து சென்றனர் அதேபோல் புகாருக்குள்ளான திருநங்கையும் குறிப்பிட்ட சில திருநங்கை மீது குற்றச்சாட்டி வைத்திருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..!!

Read Previous

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!!

Read Next

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மகிழும் வகையில் கோரிக்கைகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் : தமிழக அரசு அறிக்கை ‌..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular