செப்டம்பர் மாதம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை..!! ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது..!!
செப்டம்பர் மாதம் வங்கி விடுமுறை தொடர்பான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உள்பட அடுத்த மாதம், மொத்தம் 15 நாட்கள் விடுமுறை உள்ளது. இந்த விடுமுறை உள்ளூர் விழாக்கள் காரணமாக மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. அதன்படி, தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி (செப்.7), பரவாஃபத் அல்லது மிலாது நபி (செப்.16), 2வது சனிக்கிழமை (செப்.14) மற்றும் 4வது (செப்.28) விடுமுறை. மேலும் அனைத்து ஞாயிற்றுகிழமைகளும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.