உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் நேற்று செருப்பு தைக்கும் தெழிலாளி ராம்சைத்தை சந்தித்து உரையாடிய பிறகு, இன்று செறுப்பு தைக்க புதிய தையல் மெஷின் அனுப்பி வைத்துள்ளார் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இனி கைகளில் செருப்புகளை தைக்கத் தேவையில்லை என கூறி மகிழ்ச்சியுடன், தையல் மிஷின் பரிசளித்த ராகுல் காந்திக்கு 2 ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பி வைத்துள்ளார் செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சைத்.