சைவம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை மற்றும் தீமைகள்..!!
சைவ உணவுகள் எளிமையாக ஜீரணம் ஆகக்கூடியவை. எனவே செரிமான கோளாறுகள் ஏற்படாது. சைவ உணவுகளில் கொழுப்பு குறைவு என்பதால், இதை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் சீராக இருக்கும். எனவே இதய ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுகளாக சைவ உணவுகள் உள்ளன. ஆனால் இறைச்சிகளில் மிகுதியாக கிடைக்கும் வைட்டமின் பி12, இரும்பு, புரதம், ஒமேகா 3 போன்றவை சைவ உணவுகளில் குறைவு. சைவப் பிரியர்களுக்கு அமினோ அமிலங்கள் கிடைப்பதிலும் பற்றாக்குறை ஏற்படுகிறது.