ஜாதிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் கண்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஜாதிக்காயை பயன்படுத்துவார்கள். இந்நிலையில் ஜாதிக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அது இந்த காலகட்டத்தில் இருக்கும் நம்மில் பலருக்கும் தெரியாது. அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம். ஜாதிக்காயை சிறிது பசும்பாலில் விட்டு அரைத்து மை போல் குலைத்து இரவில் படுக்கப் போகும் முன்பு கண்களை சுற்றி தடவி வர கண்கள் குளிர்ச்சி அடையும் பளிச்சென்ற கண்களையும் பெறலாம். கால் டம்ளர் பசலைக் கீரை சாறுடன் முக்கால் டம்ளர் சூடான பால் கலந்து சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் நீர் கடுப்பு சுத்தமாக குறையும் பெண்களுக்கு ஏற்படுகின்ற கருப்பை நோய்கள் குணமாகும்.




