• September 11, 2024

ஜாதிக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..? முழு விவரம் உள்ளே..!!

இயற்கையாகவே ஜாதிக்காயில் பல்வேறு நன்மைகளை தன்னகத்தை கொண்டுள்ளது. ஜாதிக்காய் ஒரு சுவையான மசாலா. இது பல நூற்றாண்டுகளாகவே சமையல் மற்றும் மருத்துவங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஜாதிக்காய் விதையிலிருந்து வரும் நறுமண மசாலா சூடான இனிப்பு மற்றும் நட்டு சுவையைக் கொண்டதாக உள்ளது. இதனை இனிப்பு மற்றும் காரமான உணவுகளில் பயன்படுத்தி வருகின்றனர். ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த ஜாதிக்காய் கருதப்படுகிறது. இதில் பல்வேறு பயன்கள் உள்ளன அது குறித்துப் பதிவில் தெளிவாய் காண்போம்.

ஜாதிக்காய் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்ட ஒரு கலவையாக உள்ளது. இது உடல் முழுவதும் உள்ள வீக்கத்தை குறைக்கவும் கீழ் வாதம் போன்ற நிலைமைகளை போக்கவும் உதவி செய்கின்றது.

ஜாதிக்காய் செரிமானத்தை தூண்டும், இரைப்பை, குடல் ஆரோக்கியம் ஆகியவற்றை மேம்படுத்த உதவுகிறது. வயிறு உப்புசம், வாயு, அஜீரண கோளாறு, செரிமான பிரச்சனை ஆகியவற்றை இது போகிறது.

உடல் மற்றும் மனதில் அமைதியான விளைவை கொண்டிருப்பதாக இது திகழ்கிறது. இது தூக்கத்தை மேம்படுத்தவும், தூக்கமின்மையை போக்கவும் பெரிதும் பயன்படுகிறது.

ஜாதிக்காய் பாரம்பரிய மருத்துவத்தில் இயற்கை வலி நிவாரணையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தலைவலி, பல் வலி ஆகியவற்றிற்கு இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அறிவாற்றல் செயல்பாடு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த ஜாதிக்காய் பயன்படுத்த முடிகிறது.

இருமல், சளி மற்றும் ஆத்துமா ஆகிய சுவாசக் கோளாறுகளை எதிர்த்து போராட இவை பயன்படுத்தப்படுகிறது. முகப்பரு, அரிக்கும் தோல் அலர்ஜி மற்றும் சொரியாசிஸ் ஆகிய தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்க பயன்படுகிறது. ஆயுர்வேத தோல் பராமரிப்பு தயாரிப்புகளில் ஜாதிக்காய் முக்கிய பொருளை உள்ளது.

இந்த ஜாதிக்காயை உட்கொள்வதால் மாயத்தோற்றம், குமட்டல், வாந்தி, கோமா ஆகிய பிரச்சனைகள் நீங்குகிறது. கர்ப்பிணி பெண்கள் ஜாதிக்காயை சாப்பிடக்கூடாது, ஏனென்றால் இது கருப்பை சுருக்க மற்றும் பிற சிக்கல்களை ஏற்படுத்தும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் ஜாதிக்காயை உட்கொள்ளக்கூடாது, ஒவ்வாமை உள்ளவர்கள் ஜாதிக்காய் அல்லது ஜாதிக்காய் கலந்த பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

Read Previous

ஞாபக மறதி வருவதற்கான காரணம் என்ன?.. இதற்கான தீர்வுதான் என்ன?..

Read Next

கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரம்..!! சிபிஐ விசாரணை தேவையில்லை..!! தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular