
ஜிம் பயிற்சியாளருடன் கள்ளக்காதலில் இருந்த மனைவி, காதலனை ஏவிவிட்டு கணவனை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் வாரங்கலை சேர்ந்த
மருத்துவர் சுமந்த் என்பவர் கடந்த 20ஆம் தேதி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் சுமந்தின் மனைவி புளோரா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். உடல் எடையை குறைக்க ஜிம்முக்கு சென்ற போது பயிற்சியாளருடன் புளோரா காதல் வலையில் விழுந்தார். இது கணவருக்கு தெரியவரவே அவர் கண்டித்துள்ளார். இந்த நிலையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்தனர்.