நடிகர் பாவா லட்சுமணன் வின்னர், கோவை பிரதர்ஸ், மாயி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.அதிலும் மாயி படத்தில் வாம்மா மின்னல் காமெடியின் மூலம் மக்களிடம் பிரபலமானவர் பாவா லட்சுமணன். இவர் பிரபல தயாரிப்பாளரான ஆர்பி சௌத்திரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்துள்ளார்.
ஆர் பி சவுத்ரி தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் புது வசந்தம், சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, கேப்டன், நாட்டாமை, சூரிய வம்சம், சிம்ம ராசி, துள்ளாத மனமும் துள்ளும், நீ வருவாய் என, பாட்டாளி உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். நீண்ட காலமாக பாபா லட்சுமணன் தயாரிப்பு நிறுவனத்தில் தனது முழு ஒத்துழைப்பை கொடுத்து கடுமையாக உழைத்துள்ளார்.
இந்நிலையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பாவா லட்சுமணன் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சர்க்கரை நோய் பிரச்சினையால் அறுவை சிகிச்சை மூலம் அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பின்பு அவர் உயிர் பிழைத்தார். சமீபத்தில் பாவா லட்சுமணன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, இப்பவும் மாதம் மாதம் ஜீவா எனக்கு 15 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார்.
அவரது தந்தை ஆர்பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் நான் கடுமையாக உழைத்து விசுவாசமாக இருந்தேன். நான் ஹாஸ்பிடலில் இருக்கும்போது முதலில் பெரிய தொகையை அனுப்பியது ஆர்.பி சவுத்ரி தான். இப்போது நான் கேட்காமலேயே ஜீவா எனக்கு மாசம் மாசம் கரெக்டா 15 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி விடுவார். நான் விசுவாசமாக இருந்தது தான் இதற்கு காரணம் என உருக்கமாக பேசி உள்ளார்.