
இன்றைய காலகட்டங்களில் காதல் திருமணம் அதிகமாக நிகழ்கிறது இதில் புதுமண தம்பதியில் எவரேனும் ஒருவர் SC/ST வகுப்பினராகவும் மற்றொருவர் BC/MBC வகுப்பினராக இருந்தால் அவர்களுக்கு கலப்புத் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் நிதி பெறுவதற்கான கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் பழங்குடியினராக இருந்தால் 5ம் வகுப்பு படித்திருந்தால் போதும், மேலும் இவர்கள் 18 வயதை பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், இவர்கள் திருமணம் ஆகி இரண்டு வருடத்திற்குள் மட்டுமே இதனை பெற முடியும் இதனைத் தொடர்ந்து இவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள கிராம வளர்ச்சி நிர்வாகியிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்..!!