
தென் ஆப்பிரிக்கா அணியானது வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. முதல் போட்டி சமனில் முடிந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்த தொடரை தென் ஆப்பிரிக்கா அணி வென்றவுடன் சாதனை ஒன்றே படைத்துள்ளது. அதாவது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடிய 10 டெஸ்ட் தொடர்களையும் தொடர்ச்சியாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023-2025) புள்ளிப் பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.