கரூரில், தகாத உறவால் தடம் மாறிய மனைவியின் தங்கை. காவல்துறை வழக்கு பதிவு.
கரூர் மாவட்டம், தாந்தோணி மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோரணக்கல்பட்டி அருகே உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் சசிகலா வயது 33. இவரது கணவர் அருண் பிரகாஷ் வயது 35.
இவர்கள் இருவருக்கும் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் சசிகலாவின் தங்கை சங்கீதா வயது 29 என்பவர், சசிகலா வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அருண்பிரகாசுக்கும் சங்கீதாவுக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது என கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை 11 மணியளவில், வீட்டில் இருந்து சென்ற அருண்பிரகாஷ் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் வீடு திரும்பவில்லை.
அருண்பிரகாஷ் வழக்கம்போல் செல்லும் இடங்களில் தேடிப் பார்த்தும், அவரது நண்பர்களிடம் விசாரித்து பார்த்தும், உறவினர்கள் வீட்டில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதேபோல சங்கீதா குறித்தும் எந்த தகவலும் கிடைக்கப்பெறாததால், தனது கணவனையும், தனது தங்கையையும் காணவில்லை என சசிகலா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, மாயமான இருவரையும் தேடி வருகின்றனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.