தனது சிறுநீரை தானே குடிக்கும் விசித்திர மனிதர்..!! காரணத்தை கேட்டா அசந்து போயிருவீங்க..!!
ஹாரி மாட்டின் என்பவர் இங்கிலாந்தில் உள்ள ஹாம்ப்ஷயர் என்ற பகுதியை சேர்ந்தவர். இவருக்கு ஒரு வித்தியாசமான பழக்கம் ஒன்று உள்ளது. அதாவது, இவர் தன்னுடைய சிறுநீரை தானே குடித்து வந்துள்ளார். இவ்வாறு செய்வதன் மூலமாக தான் பத்து வயது இளமையாக தோன்றுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், இவர் தனது சிறுநீரை குடித்து மன உளைச்சலில் இருந்து, தான் விடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்து தன்னுடைய மனநோயை குணப்படுத்தும் முயற்சியின் பெயரில் தனது சிறுநீரை குடிக்க தொடங்கினார் எனவும், அதற்கு யூரின் தெரபி எனவும் இவர் பெயரிட்டுள்ளார். இவருடைய இந்த செயல் பலரையும் வியக்க வைத்துள்ளதொடு முகம் சுளிக்கும் செயலாகவும் உள்ளது.