
தமிழகத்தில் 78- வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு சென்னை கொத்தளத்தில் விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழாவின் போது காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் அணிவகுப்பு நடத்த உள்ளதால் அதற்கான ஒத்திகை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சி காரணமாக சென்னையின் சில இடங்களில் போக்குவரத்து பாதைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழகத்தில் இயங்கும் அனைத்து சில்லறை மதுபான விற்பனை கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்திருக்கும் மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.