
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்க்கூரில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் என்சிசி பயிற்சியில் ஈடுபட்ட 13 மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சம்பவத்தில் சிவராமன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்தார், கட்சியின் கூட்டங்களில் பலமுறை பங்கேற்று உரையாற்றியிருக்கிறார். தனியார் பள்ளிகளில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு பயிற்றுனராகவும் பணியாற்றியுள்ளார்.