
இன்றைய சூழலில் பல இடங்களில் மின்சாரத்தின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக மற்றும் மின்சார செலவினை குறைக்க வேண்டும் என்ற ஒரு வித காரணத்திற்காகவும் சோலார் பிளானட்டை ஆங்காங்கே விரிவுபடுத்தி வருகிறார்கள்.
அப்படி இருக்கும் பட்சத்தில் PM சூரிய மின் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கிராமத்திற்கு ஒரு சோலார் பிளானட்(சூரிய சக்தி மின் நிலையம்) அமைக்கப்பட உள்ளன, இதன் மூலம் ஒரு கிராமத்திற்கு தேவையான மின்சாரம் சூரிய சக்தி மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஒரு கிராமத்திற்கு ₹1 கோடி மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது, மேலும் 5000 க்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கிராமத்தில் இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது..!!