
63 வயது பிரபல நடிகரின் மனைவி கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் வெங்கடேஷ் என்பதும் இவரது அடுத்த படத்தை பிரபல இயக்குனர் அனில் அனில் ரவிபுடி இயக்க இருப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் சற்று முன் இந்த படத்தில் வெங்கடேஷ் மனைவி கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டருக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. இந்த படத்தின் நாயகன் வெங்கடேஷ் வயது 63 என்பதும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் வயது 34 என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் பூஜை நாளை காலை 11.16 மணிக்கு நடைபெற உள்ளதாகவும் அதன் பிறகு சில முக்கிய அப்டேட்டுகள் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கனவே ’கருப்பர் நகரம்’ ’மோகன்தாஸ்’ ’தீயவர் குலைகள் நடுங்க’ ஆகிய தமிழ் படங்களிலும் இரண்டு மலையாளம் மற்றும் ஒரு கன்னட படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Team #VenkyAnil3 x #SVC58 warmly welcomes the bundle of talent, @aishu_dil, on board to charm audiences as the EXcellent Wife ❤️
Pooja Ceremony Tomorrow at 11.16 AM 🪔
More EXciting updates loading💥
Victory @VenkyMama @AnilRavipudi #DilRaju #Shirish #BheemsCeciroleo… pic.twitter.com/LNWROs5J2X
— Sri Venkateswara Creations (@SVC_official) July 2, 2024