திடீரென வடக்கு பசுபிக் பெருங்கடலில் காலையில் ஏற்பட்ட 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர் .இருப்பினும் இது குறித்து சுனாமி அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
வடக்கு பசுபிக் பெருங்கடலில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக இன்று காலை 7:30 மணி அளவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 பதிவாகி இருப்பதாகவும் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கிலோமீட்டர் காலத்தில் ஏற்பட்டுள்ள இந்த நில நடுக்கம் வடக்கு அட்சரகையில் 44.13 டிகிரியும் கிழக்கு தீர்க்கதரிகையில் 156.54 டிகிரியிலும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் இதுவரை எதும் ஏற்பட்டதாக தகவல் வரவில்லை. இருப்பினும் இந்த நில நடுக்கத்தினால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் இந்த சக்தி வாய்ந்த நிலையிலான நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கதாய் உள்ளது.