
திண்டுக்கல் அருகே வெடி விபத்தில் 2 பேர் பலி..!! போலீசார் தீவிர விசாரணை..!!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர். பூலா மலை அடிவாரத்தில் வெடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிவகாசி தொழிலாளர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உடல் சிதறி உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தலைமறைவான ஆவிச்சிபட்டியை சேர்ந்த பட்டாசு ஆலை உரிமையாளர் செல்வத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.