சர்க்கரைவள்ளி கிழங்கு பயன்படுத்தி செய்யப்படும் லட்டு மிகவும் சுவையாக இருக்கும். ஆரோக்கியமான முறையில் சர்க்கரை விலங்கு லட்டு எவ்வாறு செய்வது என்பது குறித்து இப்பதிவில் தெளிவாய் காண்போம்.
தேவையான பொருட்கள்
- சர்க்கரை வள்ளி கிழங்கு
- துருவிய தேங்காய்,
- ஏலக்காய் தூள்
- ஜாதிக்காய் பொடி,
- வெள்ளம்
- நெய்
- முந்தரி, பாதாம்
செய்முறை
முதலில் சக்கரை வள்ளி கிழங்கை நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தேங்காய் துருவல், வெள்ளம், ஒரு சிட்டிகை உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஏலக்காய் தூள், ஜாதிக்காய் தூள் ,நெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
நறுக்கிய முந்திரி பாதாம் போன்ற நட்ஸ்களை சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும். பிடித்து வைத்த உருண்டைகளை தேங்காய் துருவலில் பிரட்டி எடுத்து வைத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியம் நிறைந்த சர்க்கரை வள்ளி கிழங்கு லட்டு தயார்.