நாட்டிலுள்ள ஏழை எளிய மக்கள் அவர்களின் வயதான காலத்தில் ஓய்வூதியம் என்பது கிடைப்பதே இல்லை.இவர்களின் வாழ்க்கையில் எவ்வித பாதுகாப்பும் இல்லாத இவர்களுக்கு உதவுவதற்காகவே பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மன் தன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.இத்திட்டத்தின் கீழ் ஒரு நபர் தினமும் 2 ரூபாய் செலுத்தினாலே அதாவது மாதம் தோறும் 60 ரூபாய் மட்டும் செலுத்தினால் மாதம் 3000 ரூபாய் வீதம் வருடத்திற்கு உங்களுக்கு 30,000 ரூபாய் பென்சன் கிடைக்கும் .
விண்ணப்பம் செய்யும் முறை:
இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகி உங்களது கணக்கை தொடங்கலாம்.கணக்கை தொடங்குவதற்கு ஆதார் அட்டை ,சேமிப்பு வங்கி கணக்கு மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் என்னுடன் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும்.இதில் பயன்பெற விரும்புவோரின் மாத வருமானம் 15,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் 42 கோடி தொழிலாளர்கள் வகைப்படுத்தப்படாத தொழிலில் பணியாற்றி வருவதால்,அவர்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் உள்ள பலனை பெற முடியும் என்று அரசு அறிவித்துள்ளது.